10/16/2016

9/16/2016

கிளிநொச்சியில் பற்றி எரியும் பொது சந்தை!

கிளிநொச்சியில் பற்றி எரியும் பொது சந்தை!


கிளிநொச்சி பொதுச் சந்தையில் சற்று முன்னர் பாரிய தீவிபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த பொதுச் சந்தை பற்றி எரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தீயணைப்பு வாகனங்கள் இல்லாமையின் காரணமாக தீயை கட்டுக்குள் கொண்டு வருவதில் பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இராணுவத்தினருடன் இணைந்து பொலிஸார் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகைளை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் இக்கிறிக்கொள்ளவை காணி பகிறந்தளிப்பு

இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் இக்கிறிக்கொள்ளவை காணி பகிறந்தளிப்பு

அநுராதபுரம் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் சொந்த நிதியின் மூலம்  இக்கிரிகொல்லாவா சாலம்பைக்குளம் பிரதேசத்தில் வாங்கிய காணிகளை வீடுகள் அற்ற 64 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன் போது இக்கிரிகொல்லாவா பிரதேசவாசிகள் 40 பேருக்கும், ஏனையவை சாலம்பைக்குளம்,  தல்கஹவெவ, கல்லூர், மதவாச்சிய, மஹா சியம்பலாகஸ்வெவ ஆகிய பகுதிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

அநுராதபுரம் இக்கிரிகொல்லாவா ஜும்மாப் பள்ளி வீதியின் புணரமைப்புப் பணிகள் ஆரம்பம்.

அநுராதபுரம் இக்கிரிகொல்லாவா ஜும்மாப் பள்ளி வீதியின் புணரமைப்புப் பணிகள் ஆரம்பம்.

அனுராதபுரம் மாவடடம் பாராளுமன்ற உறுப்பினர் அல் ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களினால் 11 வருடகாலமாய் சேதமடைந்து காணப்படட இக்கிற்க்கொள்ளவை ஜும்மா பள்ளிவாசல் வீதி புணரமைப்புப் பணிகள் ஆரம்பம்.

மனைவி சடலத்துடன் நடந்த நபருக்கு பஹ்ரைன் பிரதமர் அளித்த நிதி உதவி எவ்வளவு தெரியுமா?

மனைவி சடலத்துடன் நடந்த நபருக்கு பஹ்ரைன் பிரதமர் அளித்த நிதி உதவி எவ்வளவு தெரியுமா?

ஒடிசாவில் மனைவியின் சடலத்தை தோளில் சுமந்து 12 கிலோ மீற்றர் தொலைவு நடந்த தானா மஜ்கிக்கு பஹ்ரைன் பிரதமர் 9 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

ஒடிசாவில் கலாகண்டி மாவட்டத்தில் மெல்கர் கிராமத்தை சேர்ந்தவர் தானா மஜ்கி. இவரது மனைவி அமாங் தை (42) காசநேயால் அவதிப்பட்டு வந்தார். கடந்த ஆகஸ்ட் 23ம் திகதி அமாங் தையின் உடல் நிலை மோசமடைந்தது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் கடன் வாங்கவே யாரும் இல்லாத நிலையில், மருத்துவமனையில் இருந்தும் போதிய உதவி கிடைக்காமல் தனது மனைவியின் உடலை 12 கி.மீ தொலைவு நடந்தே எடுத்து வந்துள்ளார்.

இச்சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், இதுகுறித்து கேள்வியுற்ற பஹ்ரைன் பிரதமர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா, மஜ்கியின் குடும்பத்தினருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக அந்த நாட்டு தூதரகம் வழியாக விபரம் கேட்டிருந்தார்.

இந்த நிலையில், பஹ்ரைன் பிரதமர் சார்பில் மஜ்கிக்கு ரூ.9 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள பஹ்ரைன் தூதரகம் கடந்த செவ்வாய்க்கிழமையன்று காசோலையை மஜ்கிக்கு வழங்கியுள்ளது.

இதற்கிடையே புவனேஷ்வர் நகரைச் சேர்ந்த கலீஙகா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயின்ஸ் நிறுவனம், மஜ்கியின் மகள் சாந்தினி, சோனி, பிரமிளா ஆகியோருக்கு இலவசக் கல்வி வழங்க முன்வந்தது. மஜ்கியின் மகள்கள் தற்போது அங்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

9/15/2016

BREAKING  NEWS
 GALHINNA

கல்ஹின்னயில் மீண்டும் பதற்ற நிலை!!

BREAKING NEWS GALHINNA கல்ஹின்னயில் மீண்டும் பதற்ற நிலை!!

கல்ஹின்னயில் மீண்டும் பதற்ற நிலை!!

நேற்றிரவு கல்ஹின்ன பகுதியில் ஏற்பட்ட அசம்பாவிதத்தின் தொடர்ச்சியாக சற்றுமுன்னர் மீண்டும் பதற்றநிலை தோன்றியுள்ளது!

கல்ஹின்னயில், பெபிலகொல்ல பள்ளிவாசல் மற்றும் அதற்கருகிலுள்ள முஸ்லிம் வீடுகள் மீதும் இனவாதிகள் சற்றுமுன் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும் முஸ்லிம்களுக்கு சொந்தமான வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன!

தற்போது ஒருபகுதியில் இருந்து மற்ற பகுதிக்கு செல்ல முடியாத பதற்றநிலை காணப்படுவதால் முழுமையான சேத விபரம் மற்றும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதாக நமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்!

இதேவேளை, அப்பகுதியின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்காக பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாகவும் மேலும் தெரிய வருகிறது!

எது எப்படியோ அப்பகுதி மக்களின் அச்சம் நீங்கி அமைதி நிலவ பிரார்த்திப்போம்!

எச்சரிக்கை பெண்களே டியூப் மருதாணி ..

எச்சரிக்கை பெண்களே டியூப் மருதாணி ..

தற்போது கடைகளில் மருதாணிக்கு மாற்றாக கோண் எனப்படும் ஒரு வித இரசாயணக்கலவை விற்கப்படுகின்றது.இதில் expiry date அச்சிடப்படுவது இல்லை.

மேலும் இதில் நிறமிக்காக அதிக அளவில் ஆசிட் சேர்க்கப்படுகின்றது.இந்த ஆசிட்டின் வீரியம் அதிகமானால், கொப்புளங்களை ஏற்படுத்தும்.

முடிந்தவரை இயற்கையாக கிடைக்கும் மருதாணி இலையை அரைத்து பயன்படுத்துங்கள். நேரத்தை மிச்சப்படுத்த நோய்களை வாங்கி கெட்டிக்கொள்ளாதீர்கள்.